scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Thursday, 5 December 2019

NMMS அரசு கையேடு..

 அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே வணக்கம்.... தமிழக அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இலவசமாக பயன்பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்விற்கான கையேடு  TNTP தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது....   இக்கையேட்டினை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகள் பல......

கையேட்டினைத் தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, 4 December 2019

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு-2019 பயிற்சி வினாக்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு 2019 தொடர்மழை காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனிடையில் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வெகு சில நாட்களில் வரவிருக்கிறது... எனவே அதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்..  அவர்களின் நீண்டகால உழைப்பும் கனவும் வீனாய் போய்விடக்கூடாது....எனவே மாணவரகள் தங்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளவும், கற்றவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ளவும் ஏற்கெனவே நமது தளத்தில் வழங்கப்பட்ட பயிற்சி வினாக்களின் தொகுப்பினை இங்கு ஒரே இடத்தில் தொகுத்து  வழங்கியுள்ளோம்..... அவற்றை செய்துபார்த்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்....


பயிற்சித்தளத்திற்குச் சென்று பயிற்சி பெற கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்க...


Friday, 29 November 2019

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்வு 2019 - ஆன்லைன் மாதிரித் தேர்வு 2



அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே வணக்கம்.

தேர்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை......


1. பாஸ்வேர்டு, பேட்டர்ன் லாக் போன்றவற்றை ரிமூவ் செய்திடுங்கள்...


2. எக்காரணத்தைக்கொண்டும் Refresh செய்யாதீர்கள்..


3. போதுமான அளவு Charging  ஆகியுள்ளதா என்பதை கவனியுங்கள்.


4. இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் படங்கள் வெளிவர தாமதம் ஆகலாம் பொறுத்திருக்க வேண்டும்...


5. தங்களின் இ- மெயில் முகவரி மற்றும் சுயவிவரங்களை சரியாக பதிவிட வேண்டும்... இல்லையேல் தங்களின் தேர்வுமுடிவினை அனுப்ப இயலாமல் போய்விடும்.


6. கேள்விகளை தனித்தாளில் செய்து பார்த்து செல்பேசியில் விடையளிக்க வேண்டும்.


7. Submit செய்வதற்கு முன் தங்களின் விடைகளை மாற்றிக்கொள்ளலாம்.( next button ஐ  அழுத்துவதற்குள்)



8. மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுதுவதை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் உண்மையான திறனை அறிந்துகொண்டு வழிகாட்ட உதவும்




வாழ்த்துக்கள்

(தேர்விற்குச் செல்ல கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்யவும்)



தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்வு-2019 
இணைய வழி மாதிரி தேர்வு 2 (SAT)
(ஒரு சில வினாக்கள் சிறியதாக தெரியலாம் ... அவற்றை ZOOM செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்)

(29.11.2019 மதியம் 1.30 மணி முதல்)