மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்... தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் தாங்களின் கற்றல் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் மொத்தமுள்ள 36 தலைப்புகளிலிருந்தும் ஒவ்வொரு வாரமும் 6 தலைப்புகளில் சுமார் 15 வினாக்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது.... இவற்றை மாணவர்கள் தங்கள் கைபேசிகளின் வழியாக பயிற்சிபெற ஏதுவாக திறனறி ஆன்லைன் டெஸ்ட் வாட்சப் குழுவில் பயிற்சி வினாக்கள் அடங்கிய தொகுப்புகளின் லிங்க்குகளாக பகிரப்பட்டு வருகிறது.... நேரடியாக லிங்க்குகளை தொடுவதன் மூலமாக குறிப்பிட்ட தலைப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்... ( விடைகள் வழங்கப்படவில்லை...ஏனெனில் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வழிவகுக்கும் என்பதாலும், இதே வகையிலான பிற வினாக்கள் கேட்கப்பட்டால் அவர்களுக்கு அதனை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும் என்பதாலும் இந்த பயிற்சித் தேர்வுகளில் விடைகள் வழங்கப்படவில்லை....ஆனால் விடைகளை முழுமையாக தேர்வு செய்தபின்னர் சப்மிட் பட்டனை அழுத்திய பிறகு வியூ ஸ்கோர் பட்டனை அழுத்தி தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள முடியும்... ஒவ்வொரு வினாவின் மேற்பகுதியிலும் செக்சன் ஸ்கோர் 1/1என இருந்தால் அந்த வினாவிற்கு சரியான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் 0/1என இருந்தால் அந்த வினாவிற்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மாணவர்கள் புாிந்துகொள்ள வேண்டும்.) இதற்கடுத்து வரவிருக்கும் மாதிரித் தேர்வுகளில் தங்களது விடையுடன் சரியான விடை பச்சை நிரத்திலும் தவறான விடை சிவப்பு நிரத்திலும் வழங்கப்படும்... மொத்தம் 90 வினாக்கள் தங்களின் விடைகளுடன் தங்களது மெயிலுக்கு அனுப்பப்படும்....) இதுவரை 18 தலைப்புகளில் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது..ஆசிரிய பெருமக்கள் மீண்டும் மீண்டும் விளக்கிக்கூறினாலும் மாணவர்கள் அதிக பயிற்சி மேற்கொள்வதாலேயே தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற முடியும் எனவே தங்களது மாணவர்களை பள்ளியிலும், பள்ளி நேரம் தாண்டி பயிற்சிபெற அறிவுறுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...நன்றி.....
No comments:
Post a Comment
thanks for visits and come again